வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தலையில் பொடுகு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

தலையில் பொடுகு ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. எண்ணெய் வழிந்த தலை, தலையில் அதிகப்படியான இறந்த செல்கள், சுகாதாரமின்மை, தொடர்ந்து தலையினை சுத்தமாக வைத்துக் கொள்ளலாமல் இருத்தல் உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும். 

கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் தீர்க்கும் குணாதசியங்களைக் கொண்டுள்ளது.
 
கற்றாழை ஜெல்லானது சரும பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, முடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பெரும்பாலும், அடர்த்தியான முடிகள் வளர இது உதவுகிறது.
 
தலையில் ஏற்படும் புழுவெட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லானது மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தலைமுடியின் வேரில் ஏற்படும்  அலர்ஜிக்கு கற்றாழையே சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.
 
கற்றாழை ஜெல்லினை தலை முழுவதும் தடவி, பின் சிறிது நேரத்திற்குப் பிறகு சேம்புக் கொண்டு கழுவுவதன் மூலம் புழுவெட்டில் இருந்து தலையினைக்  காக்கலாம்.
 
கற்றாழையில் உள்ள புரதச் சத்துக்கள் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பலவீனமான மற்றும் உதிர்ந்த முடிகள் நீங்கி புதியதாகவும், அடர்த்தியாகவும் முடிகள் வளர்கிறது.