செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இது எலும்புகளை வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் என்பதால்,  மருத்துவரின் கேட்டு சாப்பிடலாம்.
 
தினமும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல்  பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளதால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுப்பதுடன், ரத்தசோகை பிரச்சனைகள்  வராமல் தடுக்கிறது.
 
அத்திப்பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், அது ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை  குறைக்கிறது.
 
அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
 
அத்திப்பழம் பாலுணர்வைத் தூண்டும் தன்மையைக் கொண்டதால், அது கருவுறும் திறன் மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவதுடன், அழகான மற்றும் மென்மையான சருமத்தை பெற  உதவுகிறது.