வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெங்காயத்தின் மருத்துவ குணங்களும் பயன்களும் !!

வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும். சின்ன வெங்காயத்தை, வெவ்லம் மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டு  வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
 
வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும். வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தால் இருமல், மார்புச் சளி உள்ளிட்ட மார்பு  நோய்கள் நீங்கும்.
 
வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவிவந்தால் மூட்டுவலி நீங்கும். வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டைச் சேர்த்து வதக்கி,  காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.