1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெந்தய கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

வெந்தயத்தில் விட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்த உதவும். வெந்தயத்தை சிறிது வறுத்து சுக்குடன் வைத்துப் பொடியாக்கி, கொஞ்சம் கருப்பட்டி  சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

* வெந்தயக் கீரையை தேனுடன் உண்டு வந்தால் மலச் சிக்கல் தீரும். வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால் தொண்டைப் புண்,  வாய்ப்புண் ஆறும்.
 
* மூலை நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு இந்தக் கீரை சிறந்த மருந்து. அத்துடன் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்  கட்டுப்படும்.
 
* வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல்,  வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.
 
* வெந்தயத்தை ஊறவைத்து அது முளை கட்டவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல், தக்காளிப் பழத்துண்டுகள், உப்பு, மிளகுப்பொடி, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும். சுவையான சத்துள்ள குளிர்ச்சியான சாலட்டும் கூட.
 
* வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.
 
* தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைத்து எடுத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குடல் சம்மந்தமான நோய்கள் அனைத்தும்  குணமாகும்.