வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் !!

வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து கார்போஹைட்ரேடு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னிசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை  அதிகமாக உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பலபொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேடுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு  இன்சுலின் தேவைப்படுகிறது. இது கணையத்தில் இருந்து வெளியிடப்படுகிறது.
 
வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரை பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம். கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
 
இன்சுலின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்துவதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. இதனால்  இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.
 
வெண்டைக்காய் நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம். அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம்.
 
வெண்டைக்காயில் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைய உள்ளன. அவை முக்கிய உடல் உறுப்புகளை  ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.