1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (18:03 IST)

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் !!

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.


வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் அதிலிருந்து விடுபடலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி தேனில் உள்ளது. நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேறும். மேலும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றும்.

தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலை சரிசெய்யும்.