புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:47 IST)

எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் தர்ப்பை புல்லின் பயன்கள் !!

Dharpai pul
தர்ப்பைப் புல்லில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். குடிநீரில் தர்பைப் புல்லை போட்டுக் குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும்.


15 கிராம் தர்ப்பைப் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர சிறுநீரகப் பிரச்சினைகள் அனைத்தும் போக்கி நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பை பயன்படுத்தப்படுகின்றது.

உடல் சூடு தணியும். இதற்கு தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் நல்ல பலன் கிடைக்கும். தர்ப்பை புல் விஷத்தை முறிக்க வல்லது. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை நீக்க, உப்பு கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பை போட்டு வைக்கப்படுகின்றது.

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த உதவுகின்றது. சிறுநீர் உபாதை, கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.

உடல் அரிப்பை போக்கும். உடல் அரிப்பு உள்ளவர்கள் தர்ப்பைப் புல்லைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் விட்டுக் காய்ச்சி அதனை குடித்து வந்தால் உடல் அரிப்பு பாதிப்பு நீங்கும்.