1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (09:18 IST)

அடிக்கடி உணவில் கொத்தவரங்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் !!

Kothavarangai
கொத்தவரங்காய்  ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.


கொத்தவரங்காயில் நார்சத்து நிறைந்து காணப்படுவதால் வளரும் குழந்தைகளுக்கு மேலும் சக்தியை அளிக்கிறது.

இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அவசியம். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கொத்தவரங்காயை அதிகம் சேர்ப்பது நல்ல பயனை கொடுக்கிறது.

உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடம்புக்கு தேவையான தாதுக்கள், கார்போஹைடிரேட்டுகள், புரதசத்துக்களை கொடுக்கிறது.

சரும நலத்திற்கு மிகவும் நலத்தை தரக்கூடியது. மேலும் வெளிப்புற தோல்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வை தருகிறது.

அன்றாட உணவில் கொத்தவரங்காய் பொரியல் செய்து சாப்பிட்டுவருவது மலச்சிக்கலை சரிசெய்து தேவையான நார்சத்துக்களை நமக்கு தருகிறது.

பொதுவாக எலும்புகளின் பலத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமாகும். கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கால்சியம் அதிக அளவில் நமக்கு கிடைக்கிறது.

வாரத்தில் 2 அல்லது 3 முறை கொத்தவரங்காய் எடுப்பதன் மூலம் மாரடைப்பு தவிர்க்கப்பட்டு இதயத்திற்கு நல்ல பயனை தருகிறது.