வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 19 மே 2022 (15:30 IST)

வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழையின் பங்கு !!

Aloe vera gel
கற்றாழை பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் உள்ள பூஞ்சை தொற்றுக்களை குணப்படுத்தும் அதே வேளையில் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்குகிறது.


தலையில் பொடுகு, தொற்று மற்றும் முடி உதிர்தல் போன்ற பிற முடி பிரச்சினைகளை ஏற்படுத்தும் உச்சந்தலையில் பூஞ்சை மற்றும் ஈஸ்ட் பிறப்புக்கு எதிராக இது பயனுள்ளதாக இருக்கும்.

கற்றாழை சாற்றில்  வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி. வைட்டமின் சி ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாக அறியப்படுகிறது மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கற்றாழை சாற்றை அவ்வப்போது மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயற்கையான மலமிளக்கியாக உட்கொள்ளலாம். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும்.

கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.

காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.