Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் பீன்ஸ் !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:32 IST)

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.
 
பின்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம்,  ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனிஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது.
 
பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த  காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.
 
சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.
 
பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments