வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (15:29 IST)

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி இலை !!

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.


எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.

துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

துளசி நம் உடலில் உள்ள கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. கிருமி நாசினியாகவும், உடலை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் அது செயல்படுகிறது. சளி போன்றவற்றிற்கும் துளசி மருந்தாக அமையும்.

துளசிச் செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.

துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.