வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:51 IST)

கோடை காலத்தில் உடலில் இருக்கக்கூடிய வெப்பம் அனைத்தும் வெளியேற்ற உதவும் அருகம்புல் சாறு !!

Arugampul Juice
கோடை காலத்தில் தினமும் காலையில் அருகம்புல் சாற்றை குடித்து வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய வெப்பம் அனைத்தும் வெளியேறி உடல் குளிர்ச்சியடையும்.


அருகம்புல் சாற்றை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது சிறுநீரைப் பெருக்கும். மேலும் காலையில் அருகம்புல் சாற்றை குடித்து வரும்போது அவர்களுடைய குடல் புண்கள் விரைவில் ஆறும்.

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகிறது. இதை தொடர்ந்து உட்கொண்டு வரும் பொழுது  உடல் புத்துணர்ச்சி பெறும். மேலும் வாயுத்தொல்லை பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலம் சீராக இயங்க தொடங்கும்.

நரம்புத்தளர்ச்சி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து அருகம்புல் சாற்றை குடித்து வரும் பொழுது இந்தப் பிரச்சினை விரைவில் அவர்களுக்கு மாறும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு தொடர்ந்து அறுகம்புல் சாற்றைக் குடித்து வர வேண்டும்.

படிக்கும் குழந்தைகள் ஞாபக சக்தி குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு அருகம்புல் சாற்றை கொடுக்கும்பொழுது ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதுபோல மறதிநோய் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து அருகம்புல் சாற்றை குடித்து வரும் பொழுது அவர்களுடைய மறதி பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நினைவாற்றல் அதிகரிக்கும்.

அருகம்புல் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய கெட்ட நீர் அனைத்தும் வெளியேறி உடலில் வயிற்றில் தொப்பையாக இருக்கக்கூடிய தேவையற்ற சதைப் பகுதிகள் எல்லாம் குறைந்து விடும்.

கண்பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த அருகம்புல் சாற்றை குடித்து வரும் பொழுது அவர்களுடைய கண்ணில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கி கண் பார்வை தெளிவடையும்.