1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (17:44 IST)

தனி மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் மிகுந்த மலைவேம்பு !!

Malai vembu
வேப்பிலையைப் போன்றே இருந்தாலும், இலைகள் கூர்மையான விளிம்புகள் இல்லாதவை, ஆழ்ந்த பச்சை நிறமானவை. காய் சிறிது கனமாகவும், உருண்டையாகவும் காணப்படும். இலை, வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுள்ளவை.


முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலைவேம்பு இலை, குடல் புழுக்களை வெளியேற்றும்; சிறுநீரைப் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்.

வேம்பில் அதிக வகைகள் உண்டு. மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் கொடுக்கவேண்டும். மலைவேம்பை நன்கு அரைத்து மூன்று வேளை தர வேண்டும்.

இதை சாப்பிடுபவர்கள் எண்ணெய் பண்டங்கள் மற்றும் புளியை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்பட  காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள  கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது.

மலைவேம்பு பூ, வீக்கத்தைக் கரைக்கும்; மாதவிலக்கைத் தூண்டும். மலைவேம்பு பட்டை, வாந்தியுண்டாக்கும்; கழிச்சலுண்டாக்கும். மலைவேம்பு வேர்ப்பட்டை வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; வாந்தியுண்டாக்கும்.

வயிற்றுப் புழுக்கள் வெளியாக 4 தேக்கரண்டி மலைவேம்பு இலைச்சாற்றை உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். இருபது மலைவேம்பு இலைகளை, கால் லிட்டர் நீரில் போட்டு, பாதியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி உள்ளுக்குச் சாப்பிட வேண்டும் அல்லது மலைவேம்பு வேர்ப்பட்டையைக் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில் வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் ஒழுங்காக மலைவேம்பு வேர்ப்பட்டைத் தூள் 2 தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் வெந்நீருடன் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.