வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

காயங்களை எளிதில் குணமாக்கும் அற்புத மூலிகை அரிவாள்மனை பூண்டு !!

அரிவாள்மனை பூண்டு செடியின் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது.


ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.
 
ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும். இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வறட்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.
 
இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.
 
இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.
 
இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.
 
அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.