1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (18:26 IST)

சோம்பு டீயை குடிப்பதால் இத்தனை நன்மைகளா....?

Sombu Water
உடல் அஜீரணத்தால் வாயுப் பிரச்சனை ஏற்படுகிறது. சோம்பை சிறிது சாப்பிட்டால் வயிற்றுக்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சரிசெய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு பிரச்சனை குணமாகும்.


கண்கள் மங்களாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் சோம்பை தினமும் எடுத்துக் கொள்ளலாம். கண் பார்வைக் கோளாறுகள் இல்லாதோரும் உட்கொள்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

சோம்பு டீயை தினமும் குடித்து வந்தால் உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். டீ, காஃபிக்கு சோம்பு டீ நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் எப்போதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் ஜலதோஷம் வந்தால் சரியாக சுவாசிக்க கூட முடியாது, அந்த சமயங்களில் மிகவும் சிரமப்படுவோம். அந்த சமயங்களில் இந்த சோம்பை சிறிது எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.

சோம்பு தண்ணீர் குடிப்பதால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும். சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை கழிவுகள் மூலம் வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை முறைபடுத்தி, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.