வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை  2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
 
வல்லாரை இலையை பொடி செய்து பரங்கி சக்கை தூளையும் கலந்து வைத்து காலை, மாலை, இரவு மூன்று வேளை வெண்ணெய்யுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குணமாகும்.
 
ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால்  சர்க்கரை நோய் குணமாகும்.
 
பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது. கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து  சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும்.
 
தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
 
கீழாநெல்லி சமூலம், கடுக்காய் தோல், வேப்பம் பிசின் பசும்பால் விட்டு அரைத்து நல்லெண்ணை கூட்டி அடுப்பில் வைத்து சூடாக்கி இறக்கி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பைத்தியம் குணமாகும்.
 
மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் பேதி நிற்கும். நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம்  உறைவதை தடுக்கலாம்.
 
செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும். தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும்.