வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அசைவ உணவுகளை தவிர்ப்பதால் உண்டாகும் பயன்கள் என்ன...?

கோழிக்கறி, ஆட்டுக்கறி மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு,  அதிக உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் இதயத்துக்கு செல்லும் குழாயில் கொழுப்பு படிந்து, அதிக ரத்த  அழுத்தத்தை ஏற்பத்தும்.
பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். பெண் குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பூப்படையும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது
 
பலபேர் மது அருந்தும்போது துணை உணவாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த  அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. குடலிலும் அதிக கொழுப்பு தங்கி, குடலின் இயக்கம்  பாதிக்கப்படும். 
 
அசைவ உணவுகளால் உண்டாகும் தீமைகள்:
 
உடல் பருமன், கெட்ட கொழுப்பு, நீரிழிவு நோய், இருதயநோய், நுரையீரல் வீக்கம், பக்கவாதம், இரத்த அழுத்தம், மன அழுத்தம் உண்டாகும்.
 
இறைச்சி சாப்பிடுவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும். இறைச்சியைத் தவிர்ப்பதால் உடல் சூடு குறையும். கடின உழைப்பாளிகளுக்கு சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும், உடலில் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும். அசைவம் சாப்பிட்டாலும் எந்த  பிரச்சனையும் இருக்காது.
 
உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது.  புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
 
சைவ உணவை சாப்பிடுபவர்கள், அன்றாட உணவில் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால், அசைவ உணவின் சத்துக்களை சைவ உணவின் மூலம் ஈடுசெய்ய முடியும்.