வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (17:14 IST)

வெந்தயக்கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Fenugreek Leaves
வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.


உடல் பெருத்து நடக்கக்கூட முடியாமல் சிரமப்படுகிறவர்கள், வெந்தயக் கீரை சாம்பார் செய்து உபயோகிக்கலாம். வெந்தயக் கீரை சாம்பாரில் வெள்ளைப் பூசணிக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்க ஆரம்பிக்கும்.

இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகமாகும். வெயிலில் சுற்றி வேலை செய்தால் சூடு அதிகமாகி கொப்பளங்கள் கூட உண்டாகும். வெந்தயக் கீரையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டுப் பால் குடித்தால் நல்ல பயன் கொடுக்கும். வயிற்றில் கீரிப்பூச்சிகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

நீர்க் கோர்த்துக் கொண்டு உடல் வலியாலும், முட்டி வலியாலும் சிரமப்பட்டால் உடனே நிவாரணம் அளிப்பது வெந்தயக் கீரை. வெந்தயக் கீரையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து மை போல அரைத்து எடுத்துப் பழைய சோற்றுத் தண்ணியில் கலந்து சாப்பிட்டால் நீர் வடிந்து குணமாகும்.

நரம்புத் தளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் அதிகாலையில் எழுந்து 5 கிராம் வெந்தயத்தைப் பொடி செய்து கஞ்சியில் கலந்து அல்லது பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் இக்குறைபாடு குணமாகிவிடும்.

சில பெண்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். இது போன்றவர்கள் வெந்தயத்தை சிறிது நீர்விட்டு மெழுகாக அரைத்து தலையில் தேய்த்துத் தலைய முசி வந்தால் முடி உதிர்வது நின்று விடும்.