செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் சிறிது வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!!

அன்றாடம் உணவில் சர்க்கரையை தவிர்த்து வெல்லம் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். நமது முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் அதிகப்படியான வெல்லம் சேர்க்கப்பட்டு தான் மருந்துகள் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வாமையால் வரும் ஆஸ்துமா போன்றவற்றிக்கு, இது மிகவும் உகந்ததாகும். மேலும் இதில் ஆண்டி அலர்ஜிக் தன்மை மற்றும் நீர்ப்பு தன்மை இருப்பதனால் உடல் சமச்சீர் தன்மையை அடைய உதவும்.
 
வெல்லத்தினை இளவயது பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியமானதாகும். இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள  ரத்தத்தின் அளவை அதிகரித்து ஞாபக மறதியை தவிர்க்கலாம்.
 
உணவு உண்டபின் சிறிது வெல்லத்தை உண்பதை அக்காலத்தில் ஒரு பழக்கமாகவே வைத்திருப்பார்கள். இது செரிமானத் தன்மையை  உருவாக்க கூடியது.
 
வெல்லத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உணவுக்குழாய் வயிறு, நுரையீரல் என உடல் உறுப்புகளை உறுதியாகவும் சுத்தமாகவும்  வைக்கின்றது.
 
குழந்தைகளுக்கு வரக்கூடிய குடல்புழு பிரச்சனை, அனிமியா, பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் சேர்வு, தலை சுற்றல் போன்றவற்றையும் குணப்படுத்த கூடிய அதீத சத்துக்கள் நிறைந்த உணவு வெல்லமாகும்.
 
வாதம், பித்தம், கபம், ஆகியவற்றை உடலில் சமமாக வைக்க இந்த வெல்லத்தை பயன்படுத்தலாம். இதனால் உடலிற்கு இரும்பு சத்தும்,  கால்சியமும் கிடைக்கின்றது.