புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரில் ஊறவைத்த கொத்துமல்லி விதைகளின் அற்புத பயன்கள் !!

கொத்துமல்லி இதைத் தனியா என்றும் கூறுவார்கள். இதைச் சமையல் பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைக்கவேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கவேண்டும்.
 
கொத்தமல்லி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் அரிப்பு, கண் அழற்சி மற்றும் கண் சிவத்தல் ஆகியவற்றை சரி செய்கிறது.
 
கொத்தமல்லி விதை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.
 
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாக இந்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வரலாம். கொத்தமல்லி விதைகள் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றன.
 
150 மிலி தண்ணீரில் 3 கிராம் தனியா விதை பொடியை போட்டு கொதிக்க வத்தும் குடிக்கலாம். இதனால் எலும்புகள் வலுவாகும். எலும்பு சம்பந்தமான நோய்கள் வராது.
 
கொத்துமல்லி, பனங்கற்கண்டு, சுக்கு வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து கற்கண்டு தவிர மற்றவைகளை அம்மியில் வைத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறுத்து காலையில் ஒன்னரை அவுன்ஸும், அதேபோல மாலையிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.