சொமேட்டோவின் புதிய பச்சை நிற சீருடை!
இந்தியாவில் உள்ள உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ளனது சொமேட்டோ.
விரைந்து வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்வதால் இந்த நிறுவனம் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சொமேட்ட நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ப்யூர் வெஜ் -அதாவது சைவ பிரியர்களை கவரும் வகையில், சொமாட்டோ புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளது.
அதில், தனது நிறுவ்னத்தின் வழக்கமான சிகப்பு வண்னத்திலான ஆடை, மற்றும் பைக்குக்கு பதிலாக பச்சை நிற டீசர்ட் மற்றும் உணவுப்பையை அறிமுகப்படுத்தி, ப்யூர் வெஜ் மோட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளை கூட இவர்கள் டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.