1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 4 மே 2017 (15:46 IST)

மாணவியிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 வருடம் சிறை

மும்பையில் நடுரோட்டில் மாணவியிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


 

 
மும்பையை சேர்ந்த ஆகாஷ் கட்சே(22) என்ற வாலிபர் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி கல்லூரி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது, ஆகாஷ் அந்த மாணவியின் கையை பிடித்து ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.
 
இதை சிறிதும் எதிர்பார்க்காத மாணவி அதிர்ச்சியில் பெற்றோரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் 2015ஆம் நடைபெற்றது. ஆகாஷ் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆந் தேதி வரை ஒரு வருடம் ஜெயிலில் இருந்துள்ளார். பின்னர் இந்த வழக்கு சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஆகாஷுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆகாஷ் ஏற்கனவே 1 வருடம் சிறையில் இருந்ததால் இந்த தண்டனை அவருக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே ஆகாஷ் 1 அவருடம் சிறை தண்டைனை அனுபவித்துள்ளார். வழக்கு தாமத்தால் நீதிமன்றம் வழங்கிய தாமத தண்டனை பொருந்தவில்லை என்றாலும் அவர் 1 வருடம் சிறையில் இருந்துள்ளார்.