செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (18:52 IST)

கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் கைது!

delhi
டெல்லியில்   நியூ பிரண்ட்ஸ் காலணி பகுதியில் ஒரு  கர்ப்பிணி  நாயை அடித்துக் கொன்ற இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் அன்னாசிப் பழத்திற்குள் பட்டாசு வைத்து, அதை யானைக்குக் கொடுத்தனர். அதைச் சாபிட்ட  யானை படுகாயம் அடைந்து,  நீரில் நின்று உயிரிழ்ந்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை அடுத்து, தற்போது கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி யூனியனின் உள்ள நியூ பிரண்ட் காலனி என்ற பகுதியில் ஒரு கர்ப்பிணி நாயை அடித்துக் கொன்று அதை வீடியோவாகப் பதிவிட்ட, டான் பாஸ்கோ தொழில் நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj