புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (13:48 IST)

ஆம்லேட்டுக்குள் இருந்த புழு: ரயிலில் நடந்த வீபரீதம்

ரயிலில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட ஆம்லேட்டில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பூனாவைச் சேர்ந்த சாகர் காலே என்பவர், பணிநிமித்தமாக மும்பைக்கு டெக்கன் குயீன் ரயிலில் அடிக்கடி மும்பைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் அவர் பூனேக்கு ரயிலில் திரும்பியபோது சாப்பிடுவதற்காக ஆம்ப்லேட் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்.

ஆம்லேட்டை சாப்பிடும்போது அதில் புழுக்கள் இறந்துகிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார் காலே. உடனடியாக வேறு ஆம்லேட் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 19 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலே, இது குறித்த புகாரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் ரயில்வே நிர்வாகத்திடம் அளித்துள்ளார்.

இது குறித்து ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா மையத்தின் துணை மேலாளர் ஜி.வி.சொன்னா கூறுகையில், ”காலேவிடமிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதனை நாங்கள் ஐ.ஆர்.சி.டி,சியின் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளோம். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்த பலரும், ரயிலில் பறிமாறப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.