உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல்: சென்னை உள்பட இந்திய நகரங்களுக்கு எந்த இடம்?
உலகின் செலவு மிகுந்த நகரங்களையும் பட்டியலை மெர்சார் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் உள்ள நகரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
உலகின் செலவு மிகுந்த நகரங்கள் என ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாஸல், பெர்ன், நியூயார்க், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.
மேலும் ஹவானா, விண்ட்ஹோக், டர்பன், துஷான்பே, பிளாண்டயர், கராச்சி, பிஷ்கெக், இஸ்லாமாபாத், லாகோஸ் மற்றும் அபுஜா ஆகிய நகரங்கள் செலவு குறைந்த நகரங்களாக உள்ளன.
இந்த பட்டியலில் இந்திய நகரங்களான மும்பை உலக அளவில் 136-வது இடத்தில் உள்ளது. டெல்லி 165-வது இடத்திலும் , சென்னை 189-வது இடத்திலும் பெங்களூரு (195-வது இடத்திலும் ஹைதராபாத் 202-வது இடத்திலும் புனே 205-வது இடத்திலும்கொல்கத்தா 207-வது இடத்திலும் உள்ளன.
ஆசிய அளவில் செலவு மிகுந்த நகரங்களாக ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் சியோல் நகரங்கள் உள்ளன.
Edited by Siva