திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (17:54 IST)

ஆண் வேடமிட்டு மைனர் பெண்களுடன் உல்லாசம்: தற்கொலை செய்து கொண்ட 3வது கணவன்

ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு மைனர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 32 வயதான பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு மைனர் பெண்களை மயக்கி அவர்களுடன் பாலியல் உறவை கொண்டுள்ளார். இதில் 17 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்துள்ளார். 
 
இதற்காக தன்து ஆண் நண்பர் ஒருவரை ஏற்பாடு செய்து திருமணத்திற்கு பின்னர் மூவரும் ஒன்றாக வாழலாம் என 17 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் இதற்கு மறுத்து தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். 
 
இள்ம் பெண்ணின் பெற்றோர் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். போலீஸார் தற்போது ஆண் வேடமிட்டு ஏமாற்றிய பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களை அறிந்து மனமுடைந்த ஆண் வேடமிட்டு ஏமாற்றிய பெண்ணின் 3வது கணவன் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலையும் செய்துகொண்டுள்ளது இந்த வழக்கில் சர்ச்சையை கூட்டியுள்ளது.