வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (12:29 IST)

ஆம்புலன்ஸை மறித்த சிங்கங்கள் - அங்கேயே குழந்தை பெற்ற பெண்மணி

குஜாராத் மாநிலம் அம்ரோலி மாவட்டத்தில் உள்ள லுன்சாபூர் என்கிற கிராமத்தை சேர்ந்த பெண் மன்குபென் மக்வானா(32).


 

 
அம்ரேலி மாவட்டத்தில்தான் புகழ் பெற்ற கிர் காடுகள் உள்ளது. இந்த காட்டில் பல வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மக்வானாவிற்கு கடந்த 28ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்தனர். அதில் அவரை ஏற்றி வனப்பகுதி வழியாக மருத்துவமனையை நோக்கி சென்றனர்.
 
அப்போது சாலையில் சில சிங்கங்கள் நடமாடிக்கொண்டிருந்தன. அதைக் கண்டதும் அதிர்ச்சியான ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டார். அப்போது அங்கிருந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸ் வண்டியை சூழ்ந்துகொண்டன. இதனால், ஆம்புலன்ஸ் வண்டியில் இருந்த அனைவரும் அதிர்ச்சியைடந்தனர்.  அந்த நேரத்தில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 
 
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அங்கிருந்தவாறே மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் அறிவுரைப்படி அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். சில நிமிடங்களில் அப்பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  
 
அதன் பின் ஆம்புலன்ஸ் வண்டியை டிரைவர் ஓட்டத் தொடங்க, சத்தம் கேட்டு சிங்கங்கள் சாலையிலிருந்து ஒதுங்கிக் கொண்டன. அதன்பின் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள். 
 
இது திகிலூட்டும் அனுபவமாக இருந்தது என ஆம்பூலன்ஸ் ஊழியர்களும், இந்த அனுபவத்தை மறக்க முடியாது என மக்னாவும் கூறியுள்ளனர்.