கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!
காரை ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்ணுக்கு காவல்துறையினர் அதிரடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
பெங்களூரில் இளம்பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது. ஸ்டீரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு அவர் வேலை பார்த்ததாகவும், இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் அல்லது அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யுங்கள். கார் ஓட்டும்போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து, கார் ஓட்டிக்கொண்டு லேப்டாப்பில் வேலை பார்த்த அந்த பெண்ணுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva