பீர் குடித்துவிட்டு போலீஸ்காரரை தாக்கிய பெண் கைது
ஆந்திர மாநிலத்தில் பீர் குடித்த பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை கூறியபோது, அவர் மீது அப்பெண் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆந்திர மா நிலம் விசாக பட்டினத்தில் நேற்றிரவு காவல் ஆய்வாளர் சத்ய நாராயணா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஒரு பெண் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருனந்தார். அவரை அழைத்து சாலையில் அமர்ந்து மது அருந்தக் கூடாது என்று அறிவுரை கூறினார் காவல் ஆய்வாளர்.
அப்போது, ஆத்திரம் அடைந்த அப்பெண், என் ஆண் நண்பரிடம் சொல்லி உன்னைத் தொலைத்துவிடுவேன் என்று காவல் ஆய்வாளரை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்படவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதில், அவர் மூச்சுக் காற்றில் 148.1 அளவு ஆல்கஹால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமுல்யா என்ற பேர் கொண்ட அவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Edited By Sinoj