மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி ? – கட்சிக்குள் அதிகரிக்கும் நெருக்கடி !
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டுமென மீண்டும் அழுத்தம் அதிகமாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்வியை முன்னிட்டு ராகுல்காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் இடைநிலைத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று காங்கிரஸ் நடத்திய நாட்டைக் காப்போம் என்ற பிரமாண்டப் பேரணியில் காங்கிரஸ்ஸின் முன்னணித் தலைவர்கள் மீண்டும் ராகுல் தலைவராக பதவியேற்க வேண்டும் எனப் பேசினர்.
பேரணியிலும் ராகுல் காந்திக்கே அதிகமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கூட்டத்தில் கடைசியாக பேசிய ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என பேசியது குறித்து பேசும் போது ‘ மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் இல்லை. நான் மன்னிப்பு கேட்கவும் மாட்டேன்’ எனப் பேசினார்.