ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:58 IST)

அசைவ உணவு கேட்ட மனைவியை கொலை செய்து கிணற்றில் போட்ட கணவர். அதிர்ச்சி சம்பவம்..!

அசைவ உணவு கேட்ட மனைவியை அடித்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் போட்ட கணவன் ஒருவரால் உத்தரபிரதேசம் மாநிலத்தின் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி என்ற மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் ஈஷா என்ற இளம்பெண்ணூக்கு திருமணம் நடந்தது 
 
ஈஷா என்ற அந்த பெண் கணவரிடம் அசைவ உணவு என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது அசைவ உணவு சாப்பிடக்கூடாது என கணவர் கூறியுள்ளார். 
 
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென ஈஷாவின் கணவர்  அன்ஷூ தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டு உள்ளார். இதுகுறித்த தகவல் தெரிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அன்ஷூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
Edited by Siva