1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 ஜனவரி 2025 (17:17 IST)

பிச்சைக்காரருடன் ஓடி விட்டாரா மனைவி? கணவர் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

Beggars
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், தனது மனைவி பிச்சைக்காரருடன் ஓடி விட்டதாக போலீசில் கணவன் புகார் அளித்த நிலையில், அவரது மனைவி நேரில் ஆஜராகி, தான் எதற்காக சென்றேன் என்பது குறித்து கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 36 வயது ராஜேஸ்வரி என்பவர், ஜனவரி 3 ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து, அவரது கணவர் ராஜு தனது மனைவி பிச்சைக்காரருடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும், அவருடன் தன்னுடைய பணத்தை எடுத்துவிட்டு சென்று விட்டதாகவும் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்கு வந்து, தான் வெளியேறுவதற்கான காரணத்தை தெரிவித்தார். தனது கணவர் தன்னிடம் உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டார் என்றும், அவருடைய சித்திரவதையில் இருந்து தப்பிக்கவே உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், பிச்சைக்காரருடன் ஓடி விட்டேன் என்று கூறுவது முழுக்க முழுக்க பொய் என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இதனை அடுத்து, பொய்யான புகார் கொடுத்த ராஜு மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜேஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva