புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (10:57 IST)

காங்கிரஸா, பாஜகவா யாருக்கு வெற்றி? பாபா ராம்தேவ் ஓபன் டாக்!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க இயலாது என பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க இத்தேர்தலில் வெற்றி பெற இரு கட்சிகளும் முழு முனைப்புடன் இருக்கிறது.
 
இதற்கிடையே கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த பாபா ராம்தேவ், அடுத்த தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என சமீபத்தில் கூறினார். அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப்போவது இல்லை என்றும் அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், வரும் தேர்தலில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அதனை கணிக்க முடியாது எனவும் தாம் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பிரச்சாரம் செய்யவோ அல்லது கருத்து சொல்லவோ விரும்ப இல்லை என கூறினார்.