நிலவை தொட்டாச்சு.. அடுத்து சூரியன்தான்! – ஆதித்யா விண்கலம் புறப்படும் தேதி?

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:47 IST)
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் உலவி வருகிறது.

இந்த நிலையில்  இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைந்ததை அடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யாL1 என்ற விண்கலம் விரைவில் செலுத்தப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

அதன்படி, சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துவதாக தகவல் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள செய்தியில், '' 'ஆதித்யா எல் 1' என்ற விண்கலம் பிஎஸ்எல்வி என்ற ராக்கெட் மூலம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்கிறது'' என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆதித்யா விண்கலமும் ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments