புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (10:30 IST)

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? புதிய தகவல்

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க வாய்ப்பு உள்ள நிலையில் மார்ச் 8ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் மாநாடு நடக்கவிருப்பதாகவும் அதனையடுத்து அன்றைய தினம் மாலையே அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், இதனையடுத்து மார்ச் 8ஆம் தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன
 
மேலும் 2019ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் ஏழு அல்லது எட்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது., மேலும் தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.