வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (22:01 IST)

நிர்மலா சீதாராமன் கூறியதில் என்ன தவறு? கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து பேசியபோது ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியால் தான் ஆட்டோமொபைல் துறை சரிவடைந்தது என்றும், பொதுமக்கள் மெட்ரோ ரயிலை அதிகமாக பயன்படுத்துவதால் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளதாகவும், இதுவும் ஆட்டோமொபைல் துறையில் சரிவிற்கு ஒரு காரணம் என்றும் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர் 
 
 
ஆனால் உண்மையில் நிர்மலா சீதாராமன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றன?ர் ஒரு புதிய கார் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை தேவைப்படும். அந்த காரை வாங்கி அதற்கு ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தி, பராமரிப்பு செய்து, காருக்கு பெட்ரோல் டீசல் உட்பட எரிபொருளுக்கு செலவு செய்து, ஒரு காரை பராமரிப்பதை விட ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் காரில் செல்வது மிகவும் எளிதானதாக பொதுமக்கள் கருதுகின்றனர் 
 
 
ஓலா, உபேர் கார் வேண்டுமென்றால் மொபைல் செயலியில் பதிவு செய்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாசல் முன் கார் நிற்கும்போது எதற்காக சொந்தக்கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. சொந்த காரில் பயணம் செய்வது போல நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாகவும் குறைந்த செலவிலும் செல்லும் வகையில் உள்ளது. மேலும் ஓலா, உபேர் வசதி வந்தபின்னர் சொந்த கார் வைத்திருப்பவர்கள் கூட தங்கள் காரை விற்பனை செய்து வரும் உதாரணங்கள் நிறைய உண்டு 
 
 
அதே போல் அதிகரித்து வரும் டிராபிக்ஸ் பிரச்சனையால் கார் அல்லது இரு சக்கர வாகனங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வது சவாலான ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்றால் பல இடங்களில் மட்டும் டிராபிக்கில் சிக்கி விமான நிலையம் போய்ச் சேர்வதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் 20 நிமிடத்தில் சொகுசாக ஏசியில் உட்கார்ந்து விமான நிலையத்தை அடைந்து விடலாம். இந்த காரணத்தால் கார் இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் கூட மெட்ரோ ரயில்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி இருக்கும்போது சொந்தமாக கார் அல்லது இரு சக்கர வாகனங்கள் வாங்குவது தேவையில்லாத ஒன்று என்றே பொதுமக்கள் கருவதால்தான் ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்கு ஒரு காரணம். ஆனால் இது மட்டுமே காரணம் என்று கூறுவதை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நெட்டிசன்கள் நிர்மலா சீதாராமனை கலாய்ப்பதை நிறுத்திவிட்டு கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது