கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 5 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டம் இதுவாகும். விவசாயம் தொடர்பான பணிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து, இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படுவது இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.