திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (21:02 IST)

பெட்ரோல் போல் எரியும் கிணற்று நீர் ! மக்கள் அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காட்டில் சில வீடுகளில் உள்ள கிணறுகளில் பெட்ரோல் போல் தண்ணீர் தீப்பிடித்து எரிகிறது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தக் கிணற்றிலுள்ள நீரைத் தான் குடிப்பதற்கும் சமையலுக்கும், கடைகளுக்கும்  பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கிணறுகளில் பெட்ரோலோ , டீசலோ கலந்திருக்கலாம் எஎனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரிகள்                                                   விசாரித்து வருகின்றனர்.