Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சருக்கே கொரோனா: டெல்லியில் முழு ஊரடங்கா?

Written By siva
Updated: செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:07 IST)
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்தியாவிலேயே மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லியில் தான் அதிகபட்சமாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
 
 

எல்லாம் காட்டு

எந்த அம்மா?!.. பாராளுமன்றத்தில் கலாய்த்த கேரள எம்.பி!.. தம்பிதுரை கொடுத்த ரியாக்சன்!..

தவெக இமேஜை அடிச்சி காலி பண்ணனும்!.. பக்கா ஸ்கெட்ச் போடும் உதயநிதி!...

இளைஞர்கள் என்னை திட்றாங்க!.. அவங்களை மன்னிச்சிட்டேன்!.. பிரதமர் மோடி உருக்கம்!...

சின்ன மோடி பேச மாட்டார்!. ஏன் பயப்படுறீங்க?.. பாராட்டுவிழா நடத்துங்க!.. புளூசட்ட மாறன் நக்கல்!...

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments