ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (09:05 IST)

நாசாவுக்கு முன்பே விக்ரம் லேண்டரை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்: இஸ்ரோ சிவன்

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 என்ற விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் என்ற விண்கலம் நிலவில் தரையிறங்க இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் திடீரென மாயமாக மறைந்தது
 
இதனையடுத்து அந்த மாயமான விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்க இஸ்ரோ மற்றும் நாசா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று நாசா தனது டுவிட்டரில் விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய மோதிய இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்பவர் கொடுத்த தகவலின் உதவிகரமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக அரசியல்வாதிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது விக்ரம் லேண்டரை நாசாவுக்கு முன்னரே இஸ்ரோ கண்டுபிடித்து விட்டது என்றும் இதுகுறித்து எங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்றும் கூறியுள்ளார்
 
இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தகவல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே இஸ்ரோவில் இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்ததாக கூறிய நிலையில் சிவனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது