1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (09:43 IST)

நிலச்சரிவு பகுதிக்கு காங்கிரஸ் சென்று தொண்டர்கள் உதவி செய்யுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

Rahul Gandhi
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் நிலச்சரிவு பகுதிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சென்று மீட்பு பணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு அதன் பின்னர் ராஜினாமா செய்த ராகுல் காந்தி தற்போது அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலச்சரிவு கவலை அளிக்கிறது என்றும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் கேரள முதல்வர் உடனும் வயநாடு மாவட்ட கலெக்டர் இடமும் இது குறித்து பேசி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட  பகுதிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சென்று மீட்பு குழுவினர்களுடன் சேர்ந்து உதவி செய்யுங்கள் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Edited by Siva