1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (16:20 IST)

வயநாடு நிலச்சரிவு .. லேட்டஸ்ட் தகவல்கள்.. இதுவரை 76 பேர் உயிரிழப்பு

Wayanad Landslide
வயநாடு பகுதி அருகே உள்ள மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை ஆகியவை மீட்பு பணியில் களத்தில் உள்ளன
 
மண்ணில் புதைந்தவர்களை மீட்பது முதற்கட்ட பணியாக கொண்டு மீட்புப்பணி நடக்கிறது. இதற்காக மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிவாரணப்பணிகளுக்காக அறிவித்துள்ளார். மீட்புக்குழு ஒன்றும் தமிழ்நாட்டில் இருந்து இன்று செல்கிறது
 
மேலும் சூரல்மலையை இணைக்கும் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 400 குடும்பங்கள் தவிப்பு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் கேரள நிலச்சரிவில் தமிழகத்தின் கூடலூரை சேர்ந்தவர் உயிரிழப்பு என தெரிய வந்துள்ளது. கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் கட்டட வேலைக்கு சென்ற நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாகவும், அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
Edited by Mahendran