செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:13 IST)

வயநாடு நிலச்சரிவு.. பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த அறிவிப்பு..!

wayanad
வயநாடு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க விரும்புபவர்கள் விதிமுறைகளை கடைபிடித்து தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில் பல குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்து விட்டு தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வயநாடு பகுதியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க கேரளாவிலிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கும் நிலையை இது குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளன,

இந்த அறிவிப்பின்படி வயநாடு குழந்தைகளை தத்தெடுக்க நாடு முழுவதும் பின்பற்றப்படும் தத்தெடுப்பு முறைகள் பின்பற்றப்படும்  என்றும் குழந்தையின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்யும் வகையில் சில விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அந்த விதிமுறைகளை கடைபிடித்து குழந்தைகளை தத்து எடுக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.cara.wcd.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தத்தெடுக்க பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களின் விவரங்கள், வசிப்பிடம், மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவர்களுடைய நடைமுறைகள் ஆய்வு செய்து அதன் பின்னர் அவர்கள் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குழந்தைகள் விரும்பினால் தத்தெடுப்புக்கான அடுத்தகட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva