2030-ல் இந்தியர்களுக்கு தண்ணீரே இருக்காது? சென்னையின் நிலை என்ன?
நாட்டில் உள்ள் தண்ணீர் பிரச்சனை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தால், வரும் 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளதாகவும் இதையடுத்து தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருவதாக நிதி ஆயோக் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இன்னும் இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகர தகவலையும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
122 நாடுகளை கொண்ட உலகளவிலான தண்ணீரின் தரப் பட்டியலில் இந்தியா 120 வது இடத்தை வகிக்கிறது. மேலும், சென்னை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும். இதன் காரணமாக 100 மில்லியன் மக்களின் வாழவாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.