வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (15:23 IST)

‘விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக பிராத்திக்கிறேன்’.. விராட் கோலி இரங்கல்!

ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக கோரமான விபத்தாக பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உள்ளது. மீட்புப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்ற துயரமான தகவல் நெஞ்சை அழுத்துவதாக உள்ளது.

தற்போது ஒடிசா மாநில அரசின் மீட்புக்குழு மற்றும் இந்திய ராணுவ மீட்புக்குழு ஆகியை மீட்புப் பணிகளில் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டியுள்ளது. சென்னை நோக்கி வந்த இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் இருக்கலாம் என தெரிகிறது.

இந்த விபத்துக்கு இந்திய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலி ட்விட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ”ஒடிசா ரயில் விபத்து குறித்து அறிந்து துக்கமடைந்தேன். உயிரிழந்தவர்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நான் பிராத்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.