1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (20:51 IST)

டெல்லி காற்று மாசுக்கு குரல் கொடுத்த கோலி

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்கவே முடியாத மக்கள் வீட்டிலே முடங்கி உள்ளனர். 
 
காற்று மாசுபடுவதற்கு போக்குவரத்து அதிகரிப்பு ஒரு காரணியாக உள்ளதால், மக்கள் தனியார் போக்குவரத்தை விடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
டெல்லியின் நிலை நமக்கு நிச்சயம் தெரியும். நிறையப்பேர் இது ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விவாதித்து மட்டும் வருகிறார்கள். மாசுபாட்டிற்கு எதிரான இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து விளையாடினால் மட்டுமே முடியும். டெல்லியில் நிலவி வரும் மாசுபாட்டை குறைப்பது நமது கடமை. 
 
மக்கள் இந்த நேரத்தில் பொது போக்குவரத்தை உபயோகப்படுத்த வேண்டும். பேருந்து மெட்ரோ, ஓலா ஷேர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். நமது சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.