பிரியங்காவை கிண்டல் செய்த ராகுல்காந்தி! வைரலாகும் வீடியோ
சகோதரி பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். ராகுல்காந்தியை விட பிரியங்காவின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது
இந்த நிலையில் கான்பூருக்கு பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டர் தளத்திற்கு ராகுல்காந்தி வந்தபோது அவரை வழியனுப்ப பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். அப்போது 'தான் நீண்ட தூரம் பிரச்சாரம் செய்ய சென்றாலும் சிறிய வகை ஹெலிகாப்டரை மட்டுமே பயன்படுத்துவதாகவும், ஆனால் தனது சகோதரி பிரியங்கா காந்தி அருகில் உள்ள தூரத்திற்கு செல்வதாக இருந்தாலும் பெரிய வகை ஹெலிகாப்டரை பயன்படுத்துவதாகவும் கிண்டலுடன் கூறினார். இதனையடுத்து பிரியங்கா காந்தி, ராகுலை செல்லமாக தள்ளிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது