இந்தியா ஜெர்சி அணிந்து எம்எல்ஏ பதவியேற்ற தினேஷ் போகத்: குவியும் வாழ்த்துக்கள்.
சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில், மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வினேஷ் போகத், ஜூலானா தொகுதியில் சுமார் 6,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்று சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற விழா நடைபெற்றது, இதில் இந்தியா ஜெர்சி அணிந்து வினேஷ் போகத், ஜூலானா தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் வினேஷ் போகத் பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது என்பதும், இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அவர் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்று தற்போது அரசியல்வாதியாக உள்ளார்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஜூலானா தொகுதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran