வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:47 IST)

காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.! ஹரியானா தேர்தலில் போட்டியிட திட்டம்.!!

Vinesh Phogat
மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.  
 
90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது.    இதனிடையே ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் வீரர் பஜ்ரங் புனியா இருவரும் கடந்த புதன்கிழமை டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.   

இதன் மூலம் இருவரும் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில்  வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி காங்கிரஸில் இன்று இணைந்தனர். 


ரயில்வே பணி ராஜிமானா:

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜிமானா செய்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய ரயில்வேயில் சேவையாற்றியது என் வாழ்வில் மறக்கமுடியாத மற்றும் பெருமையான தருணம். ரயில்வே துறையில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்தேன். ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வேயின் திறமையான அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்.

தேசத்திற்கு சேவை செய்ய ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக, இந்திய ரயில்வே குடும்பத்தினருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என வினேஷ் போகத் பதிவிட்டுள்ளார்.