ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (18:27 IST)

காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் விஜய் !

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காடு நல்லமல்லா  காடு. இந்தக் காடுகள் ஆந்திர மாநிலத்தின் தனித்த அடையாளமாகக் காணப்படுகிறது.  இந்தக் காடுகளில் யுரெனியம் கிடைப்பதால்,  அதை எடுக்கவேண்டி, இங்குள்ள மரங்களை அழைக்க அரசு திட்டமிட்டு வந்தன. 
இதனால், நல்லமல்லா காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான, அரசின் முடிவுக்கு தெலுங்கு சினிம நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : யுரேனியத்தை பணம் கொடுத்து வாங்கலாம், ஆனால் காடுகளை அப்படி வாங்க முடியுமா ? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமேசான் மழைக்காடுகள் போல தற்போது நாடு முழுவதும், முக்கியப் பேசுபொருளாகி வருகிறது இந்த நல்லமல்லா காடுகள். இந்தக் காடுகளின் அழிவுக்கு எதிராகக் குரல் கொடுத்த விஜய் தேவரகொண்டாவை அடுத்து, தெலுங்கு நடிகர்கள் பலரும் அரசின் காடுகள் அழிப்புக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.